பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை அபா கதுவா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
தாய்லாந்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, தாய்லாந்த் தலைநகர் பாங்காக்கில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய தடகள வீரர்கள் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் குண்டு எறிதலில் பெண்களுக்கான குண்டு எறிதல் இறுதிப் போட்டியில் 18.06 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து இந்திய வீராங்கனை அபா கதுவா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அவரையடுத்து, மன்பிரீத் கவுர் 17 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து வெண்கலம் வென்றுள்ளார்.
