அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி கார் விபத்தில் இருந்து தப்பிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து பிரபலம் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். இந்நிலையில், மெஸ்ஸி புளோரிடாவின் போர்ட் லாடர்டேல் பகுதியில் உள்ள இண்டர் மியாமி பயிற்சி நிலையத்திலிருந்து காரில் போலீசார் பாதுகாப்புடன் தனது வீட்டிற்கு செல்கிறார்.
அப்பொழுது சாலையில் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கையில், ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க வருகையில் மெஸ்ஸியின் கார், அந்த சிக்னலை கடந்து சென்றது. இதன் காரணமாக, அவரது கார் சாலையில் சென்றுகொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதும் அபாயம் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக மற்ற ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், விபத்து ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. வாகனத்தை மெஸ்ஸி ஓட்டினாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
unknown node