19வது ஆசிய விளையாட்டுப் போட்டி.! இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்று அசத்தல்.!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங்

Asian Games

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். சீனாவில் தொடங்கியுள்ள 19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன. ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். கடந்த முறை இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டில் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி 3 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. இதில் 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. இந்த போட்டியில் 5.43 நிமிடங்களில் இலக்கை கடந்த நிலையில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

அதோடு, துடுப்பு படகு போட்டியில் அர்ஜுன் லால் ஜட், அரவிந்த் சிங் ஆகியோர் அடங்கிய குழு வெள்ளிப் பதக்கம் வென்றது. அவர்களைத்தொடர்ந்து பாபு பால் மற்றும் லெக் ராம் இணை டுப்பு படகு இறுதி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது. இந்த துடுப்பு படகு போட்டிகளில் மொத்தமாக இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது.

துடுப்பு படகு போட்டியில் சீனா வீராங்கனைகள் சோவ் ஜியாகி, கியூ ஜியூபிங் அடங்கிய குழு தங்கப் பதக்கம் வென்றது. மேலும், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, ஆஷி, மெகுலி கோஷ் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. அதன்படி, ரமிதா, மெஹுலி கோஷ் மற்றும் ஆஷி சௌக்சே ஆகிய மூவரும் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மொத்தம் 1886 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

சீனா 1896.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. மங்கோலியா 1880 உடன் வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதைத்தொடர்ந்து, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ரமிதா வெண்கலம் வென்றார். ரமிதா 230.1 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சீனாவின் ஹான் ஜியாயு 251.3 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார். இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி.! இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்று அசத்தல்.!