ஓரளவுக்குத் தான் அடிவாங்க முடியும்..! – கொமதேக சமஉ ஈஸ்வரன் பேச்சு

ஆளுநரின் செயல்பாடுகளை சவால் விடுவதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது

ஆளுநரின் செயல்பாடுகளை சவால் விடுவதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது

ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆளுநர் செயல்பாடுகள் குறித்த தீர்மானமனத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் கீழ் முதல்வர் மு. க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், இந்த தீர்மானத்தின் கீழ், கொமதேக சமஉ ஈஸ்வரன்  கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஆளுநர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் சங்கத்தைத் தான் தொடங்கவேண்டும்; ஓரளவுக்குத் தான் அடிவாங்க முடியும். ஆளுநரின் செயல்பாடுகளை சவால் விடுவதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது; முதலமைச்சரை கோபப்படுத்தி, வார்த்தைகள் வராதா? என எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது என தெரிவித்துள்ளார்.