நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு பாதுகாப்பது தரப்படும் – தமிழக போலீஸ்

நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என தமிழக போலீஸ் உறுதி.

நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என தமிழக போலீஸ் உறுதி.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த முதுகலை பட்டதாரியான ஷாலினி சர்மா அவரது வளர்ப்பு தாய் சுதா சர்மா  தன்னை நரபலி இடப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுஅளித்துள்ளார்.

நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்

அப்பெண் அளித்துள்ள மனுவில், தமிழ்நாடு, பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்றும், அவர் மத்தியபிரதேசம் செல்ல விருப்பம் இல்லை என்றும், அவரது வளர்ப்பு தாய் ஆர்எஸ்எஸ்  அமைப்பில் இருப்பதாகவும், அவர்களின் தூண்டுதலின் பெயரிலேயே தன்னை நரபலி கொடுக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

உரிய பாதுகாப்பு வழங்கப்படும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த நூற்றாண்டிலும் பில்லிய சூனியம் மாந்திரீகத்தை நம்பி நரபலி தரப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. வளர்ப்பு தாய் மீது பெண் அளித்த புகாரியில் எடுத்த நடவடிக்கை பற்றி போபால் காவல் ஆணையர் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். அப்பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக போலீஸ் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.