அதானிக்கு கொடுத்த கடன் வருமா? வராதா? என்பது தெரியாது- சு.வெங்கடேசன் எம்.பி

அதானிக்கு கொடுத்த கடன் வருமா? வராதா? என்பது தெரியாது. ஆனால் எங்கள் அக்காமார்களுக்கு கொடுத்த கடன் உறுதியாக திரும்பவரும் என சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்.

அதானிக்கு கொடுத்த கடன் வருமா? வராதா? என்பது தெரியாது. ஆனால் எங்கள் அக்காமார்களுக்கு கொடுத்த கடன் உறுதியாக திரும்பவரும் என சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்.

மதுரையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் சு.வெங்கடேசன் எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில், தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களை வைத்து மட்டுமே சுயஉதவி குழுக்கள் இருப்பது நமது பெருமை.

unknown node

வறுமைக்கோட்டிற்கு மேலே இருப்பவர்களுக்கும் சுய உதவி குழுக்களில் வைத்து கடன் வழங்குகிறது. இந்தியாவில் வராக் கடன் மிகக்குறைவாக இருக்கிற மகளிர் சுயஉதவி குழுக்களை கொண்ட மாநிலம் தமிழகம் என்பது நமக்கு மிகப்பெரிய பெருமை.

அதானிக்கு கொடுத்த கடன் வருமா? வராதா? என்பது தெரியாது. ஆனால் எங்கள் அக்காமார்களுக்கு கொடுத்த கடன் உறுதியாக திரும்பவரும். உங்களை நம்பி தான் இந்த அரசு மற்றும் சமூகம் இருக்கிறது.