அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை என அறிவித்து விட்டு தற்போது தகுதிவாய்ந்தவர்களுக்கு என சொல்கிறீர்கள் என சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி கேள்வி
கடந்த 20-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது, ஏப்ரல் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.
29-ஆம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி மகளிர் உரிமைத்தொகை குறித்து கேள்வி எழுப்பியுள்ளளார்.
அவர் கூறுகையில், அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை என அறிவித்து விட்டு தற்போது தகுதிவாய்ந்தவர்களுக்கு என சொல்கிறீர்கள். மக்கள் உங்களை நம்புவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.