#BreakingNews : விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

They assured me that they will be on my side with whatever decision I make, I will announce my decision as soon as possible -rajinikanth says

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது.ஆலோசனை நடைபெற்று முடிந்த பின் சென்னை  போயாஸ் கார்டனில் உள்ள அவர் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம்  பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில்,  நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அவர்களுடைய கருத்தை கூறினார்கள்.நான் என்னுடைய கருத்தை கூறினேன்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.