முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பற்றி பேசாதது ஏன்? ஓபிஎஸ் எதுவுமே செய்யவில்லையா? என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கேள்வி.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாததில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை பாராட்டி பேசினார்.
அப்போது குறுக்கிட்ட நிதியமைச்சர், கொடுத்த நேரத்தில் பாதி நேரம் பாராட்டு தெரிவித்தே கடந்து விட்டதாகவும், பட்ஜெட் விவாதத்திற்குள் வர வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்பின்னும், அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை புகழ்ந்து பேசினார்.
இதனை தொடர்ந்து, குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக தலைவர்களின் திட்டங்களை சரியாக சொல்லி வரும் உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பற்றி பேசாதது ஏன்? ஓபிஎஸ் எதுவுமே செய்யவில்லையா? என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.