அனைவருக்கும் சமமான உரிமை கொடுப்பதே எங்களது நோக்கம் என சபாநாயகர் அப்பாவு பேட்டி.
சபாநாயகர் அப்பாவு அவர்கள் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்பாவு பேட்டி
அப்போது பேசிய அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈரோடு தேர்தல் பரப்புரையில் கூறியது போல மகளிர் உரிமை தொகை ரூ.1000 இந்த ஆண்டு தகுதியுள்ள நபர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்க முழு உரிமை என்னிடம் உள்ளது. அனைவருக்கும் சமமான உரிமை கொடுப்பதே எங்களது நோக்கம் என தெரிவித்துள்ளார்.