சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது ? தினகரன் விளக்கம்

When will Sasikala return to Tamil Nadu? Dhinakaran Description

ஒரு வார காலம் ஓய்வுக்‍குப்பின் சசிகலா சென்னை திரும்புவார் என்று  தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கடந்த 20-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த  நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின் சசிகலாவின் உறவினரும் ,அமமுகவின் பொதுச்செயலாளருமான தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில் , மருத்துவர்களின் அறிவுரைப்படி சசிகலா ஒருவார காலம் ஓய்வு எடுப்பார்.இதன் பின் சென்னை திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.