மேகதாது விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில் கர்நாடகவிற்கு முதல்வர் சென்றால் ‘கோ பேக்’ ஸ்டாலின் என போராட்டம் நடத்துவோம் என அண்ணாமலை பேட்டி.
சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மேகதாது ஆணை காட்டுவதாக காங்கிரஸ் கட்சி தான் தேர்தல் அறிக்கை கொடுத்தது. மேகதாது அணை மூலம் சிவகுமாரின் தொகுதி தான் அதிகம் பயன்பெறும்.
மேகதாது விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில் கர்நாடகவிற்கு முதல்வர் சென்றால் ‘கோ பேக்’ ஸ்டாலின் என போராட்டம் நடத்துவோம். கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியை கண்டிக்க தமிழக முதல்வருக்கு மனதில்லை. மேலும், காவிரி நதி நீர் பங்கிட்டு விவகாரத்தில் பாஜக என்ற அரசியலும் நடத்தவில்லை. முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்தில் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
