எங்களுக்கு அவர் தான் முதல்வராக வேண்டும்... டி.கே.சிவகுமார் இல்லத்திற்கு முன் திரண்ட ஆதரவாளர்கள்.!!

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?' என்று கேள்வி அரசியல் வட்டாரங்கள்

dk shivakumar

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?’ என்று கேள்வி அரசியல் வட்டாரங்கள் மத்தியில் எழுந்து வரும் நிலையில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக டி.கே. சிவகுமாரை தேர்வு செய்ய வேண்டும் என கட்சியின் தொண்டர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்திற்கு வந்தார். இதனை அறிந்த ஏராளமான ஆதரவாளர்கள் மொத்தமாக திரண்டு டி.கே.சிவக்குமாரின் இல்லத்திற்கு வெளியே    ‘எங்களுக்கு டி.கே.சிவகுமாரை முதல்வராக வேண்டும்’ என கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

unknown node

இதைப்போல, ‘காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா 2-வது முறையாக முதல்வராகிறார்” என அவர் வீட்டின் முன்பு சில தொண்டர்கள் பேனர் வைத்திருந்தனர். விரைவில் யார் முதல்வராக பொறுப்பேற்கபோகிறார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுக்கு அவர் தான் முதல்வராக வேண்டும்... டி.கே.சிவகுமார் இல்லத்திற்கு முன் திரண்ட ஆதரவாளர்கள்.!!