நமக்குள் நாம் அடித்துக் கொண்டே இருந்தால்தான் நாம் ஆளுங்கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் இருக்க முடியும் என சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி பேச்சு.
சட்டப்பேரவையில், நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி அவர்கள் சட்ட பேசினார். அப்போது பேசிய அவர், திமுக அதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது.
திமுக அதிமுக இடையேதான் போட்டி
நமக்குள் நாம் அடித்துக் கொண்டே இருந்தால்தான் நாம் ஆளுங்கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் இருக்க முடியும். திமுகவை எதிர்த்தால் தான் நாங்கள் ஆளும் கட்சியாக வர முடியும் நீங்க எதிர்க்கட்சியாக வர முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் திமுக, அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என ஜே.பி.நட்டா கூறியிருந்த நிலையில், கே.பி.முனுசாமி பேசியது தற்போது அதிமுக – பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.