ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் சிறைக்கு செல்லவும் தயார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேற்று, ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் ராகுலுக்கு ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்
ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே காட்டம் :
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “மோடி அரசாங்கம் திரு. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பயப்படுகிறது. ஜனநாயகத்தை கொலை செய்ய ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்துவிட்டார்கள் என்றும் உண்மை பேசுபவர்களை வாயடைக்க நினைக்கிறார்கள்” என்றும் கூறினார்.
unknown node“இந்த சர்வாதிகாரத்தை நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ஜனநாயகத்தை பாதுகாக்க சிறைக்கு கூட செல்வோம்.” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மேலும் கூறினார்.