வன்முறையும், திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது – ஓபிஎஸ்

திமுக ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக காவல் நிலையத்திலேயே வன்முறை வெறியாட்டம் என ஓபிஎஸ் அறிக்கை

திமுக ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக காவல் நிலையத்திலேயே வன்முறை வெறியாட்டம் என ஓபிஎஸ் அறிக்கை

அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், எம்பி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பு நின்ற கார் கண்ணாடி சேதமடைந்ததுடன், வீட்டில் இருந்த நாற்காலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டது.

காவல்நிலையத்தில் மோதல்

இதனையடுத்து, அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சியில் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது  அமைச்சர் நேருவின் தரப்பினர் தாக்கல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண் போலீஸ் காயமடைந்தார். தாக்குதலை தடுத்த போது, காவலர் சாந்திக்கு எலும்புமுறிவு ஏற்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை

இந்த நிலையில், இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,வன்முறையும், திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது. திமுக ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக காவல் நிலையத்திலேயே வன்முறை வெறியாட்டம் நடைபெற்றிருக்கிறது.

காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் தமிழக அரசுவாய்திறக்காமல் இருப்பதை பார்க்கும்போது, அவரது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது என பதிவிட்டுள்ளார்.

unknown node