இன்று ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம்..! மம்தா பானர்ஜி

ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததையடுத்து, மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி நிராகரிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக மற்றும் மோடி அரசின் மீது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அரசியல் சாசன ஜனநாயகம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி, பாஜக மற்றும் மோடி அரசின் மீது  கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர். அதே நேரத்தில் குற்றப் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் இருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு ஒரு புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம்.” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

unknown node