வேண்டுமென்று திட்டமிட்டு எந்த அதிகாரிகளையும் மாற்றவில்லை என்பதை மீண்டும், மீண்டும் சொல்கிறேன் என முதல்வர் பேச்சு.
அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் காரசாரமான வாதம் நடைபெற்றது.
முதல்வர் – ஈபிஎஸ் இடையே வாதம்
பேரவையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பிரதான எதிர்க்கட்சி அதிமுக, அதன் தலைமை அலுவலகத்தை சிலர் திட்டமிட்டு தாக்க முயற்சித்தனர்; தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரி காவல்துறையில் புகார் அளித்தோம், ஆனால் காவல்துறை வழங்கவில்லை என தெரிவித்தார்.
முதல்வர் பதில்
இதற்க்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக அலுவலகத்தில் நடந்த பிரச்னை உட்கட்சி விவகாரம் , வெளியே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பாதுகாப்பு கொடுத்தோம், உள்ளே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.
unknown nodeஎதாவது தவறுகள் நடந்திருந்தால் தான் காவலர்கள் மாற்றப்படுவார்கள்; தூக்கியடிப்பது, பழிவாங்குவது, அரசியல் ரீதியாக செயல்படுவது எல்லாம் இந்த ஆட்சியில் நடக்காது; வேண்டுமென்று திட்டமிட்டு எந்த அதிகாரிகளையும் மாற்றவில்லை என்பதை மீண்டும், மீண்டும் சொல்கிறேன்.
அதிமுக அலுவலக பிரச்னை குறித்து முறைப்படி தமிழ்நாடு காவல்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.