ஆளுநருக்கு வாய் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால், இதயம் இருக்கிறதா என்று தெரியவில்லை என மைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘உங்களில் ஒருவன்’ தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது, ஆளுநர்கள் அரசியலில் தலையிட கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பாஜக அரசின் ஆளுநர்கள் செவிமடுப்பார்களா என்ற கேள்விக்கு, ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என கருத்து தெரிவித்திருந்தார்.
இதயம் இருக்கிறது
unknown nodeமுதல்வரின் கருத்துக்கு ஆளுநர் தமிழிசைஆளுநருக்குவாய் இருக்கா காது இருக்கா என்று எனக்கு தெரியாது ஆனால்இதயம்இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
unknown nodeஇதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ஆளுநருக்கு வாய் இருக்கிறது என்பது தெரிகிறது. நாள்தோறும் சனாதனம் பற்றி பேசுகிறார். அவருக்கு உண்மையிலேயே, இதயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இதயம் இருக்கிறது என்றால் 44 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்குப் பிறகும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கையெழுத்து போடாமல் திரும்பி அனுப்புகிறார் என தெரிவித்துள்ளார்.