அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளித்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்கலாம் – விஜயகாந்த்

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கை அழுகி இறந்ததை கண்டித்தும், குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை

vijayakanth

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கை அழுகி இறந்ததை கண்டித்தும், குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தையின் கை அழுகி இறந்து போனது மிகவும் கவலை அளிப்பதோடு கண்டனத்துக்குரியது. அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும்.

எனவே இனிமேலும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தமிழக அரசு மருத்துவ துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தையின் உயிரை இழந்துவாடும் அந்த குடும்பத்திற்கு தேவையான இழப்பீடு தொகையை கட்டாயம் கொடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் மருத்துவமனையின் சிகிச்சை கவனக்குறைவாக இல்லாமல், ஒவ்வொரு உயிரும் விலை அரசு மதிப்பு மிக்கது என்பதை மனதில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் செயல்படவேண்டும். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

unknown node