சுதந்திர தின விழாவில் இடம்பெறும் பிரதமரின் உரைதான் இதுதான் – மம்தா
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதந்திர தினத்துக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமரின் உரை இதுதான் கடைசியாக இருக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா முழுவதும் பாஜகவை இந்தியா கூட்டணி வீழ்த்தும். பிரதமர் ஆசை எனக்கில்லை, பாஜக வீழ்த்தப்பட வேண்டும். பாஜக ரபேல் போன்ற விஷயங்களில் ஊழலில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு மீது பல்வேறு ஊழல் புகார் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.