நமது மாநிலத்தை பாஜக தொடர்ந்து அவமதித்து வருகிறது என ஜோதிமணி எம்.பி ட்விட்.
ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருந்துள்ளது.
கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. தமிழ்நாடு இலட்சினை பயன்படுத்தப்படவில்லை.
இது குறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெறாதது கடுமையான கண்டனத்துக்குரியது. நமது மாநிலத்தை பாஜக தொடர்ந்து அவமதித்து வருகிறது. இந்த ஆளுநர் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.