மத்திய அரசின் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது, நன்றிக்குறியது..! – ஜி.கே.வாசன்

நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து என்று மத்திய அரசு இன்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, நன்றிக்குறியது என ஜி.கே.வாசன் ட்வீட்.

நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து என்று மத்திய அரசு இன்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, நன்றிக்குறியது என ஜி.கே.வாசன் ட்வீட்.

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம்,  உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து ஜி.கே.வாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில்  டெல்டா மண்டலத்தைஉறுதியோடு பாதுகாக்கும் விதமாக நிலக்கரி சுரங்க திட்டம்ரத்து என்று மத்திய அரசுஇன்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, நன்றிக்குறியது. என பதிவிட்டுள்ளார்.

unknown node