மத்திய பிரதேசத்தில் இவர்கள் ஆதரவு இல்லாமல் வெற்றிபெற முடியாது.! – கமல்நாத் கருத்து

மத்திய பிரதேசத்தில் தேர்தலில் 150 இடங்களில் எஸ்சி, எஸ்டி தரப்பினர் ஆதரவு இல்லாமல் வெற்றிபெற முடியாது என மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் தேர்தலில் 150 இடங்களில் எஸ்சி, எஸ்டி தரப்பினர் ஆதரவு இல்லாமல் வெற்றிபெற முடியாது என மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பட்டியல் பழங்குடியினர் துறையின் கட்சித் தொண்டர்களின் மாநாட்டில்  பேசிய மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், மத்தியப் பிரதேச தேர்தலில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் (எஸ்சி) சமூகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார்.

மேலும் மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் 150 தொகுதிகளில் எஸ்சி, எஸ்டி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்றும் இந்த 150 இடங்களில், எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) களின் பங்களிப்பு வெவ்வேறு சட்டமன்ற இடங்களில் 5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை பற்றி கூறுகையில், பிரதமர் மோடி 2013-ல் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விவசாயிகள் பற்றி பேசினார். ஆனால் 2019 தேர்தலில் விவசாயிகளை பற்றி ஒருமுறை கூட பேசாமல் பாகிஸ்தான், தேசியவாதம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி பேசினார். இதிலிருந்து அவர் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் வல்லவர், நம் நாட்டை வலிமையாக்குவது பற்றி பேசுவதில்லை” என்று கமல்நாத் கூறியது குறிப்பிடத்தக்கது.