களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல் உள்ளது – ரஜினிகாந்த் எச்சரிக்கை

It has been reported that Rajinikanth has warned in today's consultation that there is some act of defamation and I have the evidence.

களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல் உள்ளது,ஆதாரம் என்னிடம் உள்ளது என இன்று நடைபெறும் ஆலோசனையில் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். நிர்வாகிகளுடனான இந்த சந்திப்பில், நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனையின் போது,அரசியலில் பதவிக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் 2021 ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.