இவரது பெயரில் தமிழக அரசு விருது வழங்க வேண்டும் – சீமான்

தலைவர்களின் பெயரில் அரசு விருது வழங்கி வரும் நிலையில் சிலம்பு செல்வர் பெயரிலும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும் என சீமான் கோரிக்கை.

தலைவர்களின் பெயரில் அரசு விருது வழங்கி வரும் நிலையில் சிலம்பு செல்வர் பெயரிலும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும் என சீமான் கோரிக்கை.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், சிலம்பு செல்வர் சுதந்திரப் போராட்ட தியாகியான ம.பொ.சி 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிலம்பு செல்வர் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் ம.பொ.சிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. தலைவர்களின் பெயரில் அரசு விருது வழங்கி வரும் நிலையில் அவரது பெயரிலும் தமிழக அரசு விருது வழங்க கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.