குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 சிறப்பு பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் தயார்...!

The Tamil Nadu government has said that a token card is ready to provide Rs 2,000 and special items to family cardholders

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 சிறப்பு பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் அட்டை தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணையான 2,000 ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக,குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2,000 ரூபாயினையும்,14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினையும்,ஒரே நேரத்தில் பெற்றுச் செல்லும் வகையில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் சிறப்பு பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் அட்டை தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

unknown node

அதன்படி,கொரோனா நிவாரண தொகையில் இரண்டாம் தவணையான 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்களானது வருகின்ற ஜூன் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.

இந்த டோக்கன்களின் அடிப்படையில்,2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை 15-6-2021 முதல் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.