#Breaking:தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

The Tamil Nadu government has ordered the transfer of 49 IPS officers

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்பு தொடர்ந்து பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 49 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,

திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, காவல்துறை டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கப்பிரிவு ஐஜியாக உள்ள செந்தாமரைக் கண்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை நிர்வாக டிஐஜியாக இருந்த ஏ.ஜி.அன்பு, வேலூர் சரக டிஐஜியாக பணியிட மாற்றம்,

நலத்திட்ட ஐஜியாக இருந்துவரும் சுமித்சரண், ரயில்வே டிஐஜியாக நியமணம்

ஊழல் கண்காணிப்பு ஐ.ஜி நஜ்முல் ஹோடா,சேலம் மாநகர காவல் ஆணையராக நியமணம்.

திருப்பூர் காவல் ஆணையராக வனிதா நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி சரஜ டிஐஜியாக ராதிகா நியமணம்.

திண்டுக்கல் சரக டிஐஜியாக விஜயகுமாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,ஐபிஎஸ் அதிகாரிகள் அமித்குமார் சிங்,அஸ்வின் கோட்னிஸ்,பாலகிருஷ்ணன்,பிரதீப் குமார் உள்ளிட்ட 4 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செயய்ப்பட்டுள்ளனர்.

#Breaking:தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்