#Breaking:முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ் – ஆய்வில் வெளியான முக்கிய தகவல்..!

The study has revealed that AIADMK ex-minister Manikandan immediately destroyed the pornographic SMS sent to the actress

நடிகைக்கு அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ்களை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடனுக்குடன் அழித்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால், மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனுக்கு, சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டதாக கூறி,அவரை புழல் சிறைக்கு அதிகாரிகள் மாற்றம் செய்தனர்.

இதனையடுத்து,மணிகண்டனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து,சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு அமைச்சரை ஆஜர்படுத்தினர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் கோபாலபுரத்தை சேர்ந்த மருத்துவரிடம் நேற்று அடையாறு மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது,மணிகண்டன் அவர்கள் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும்,நடிகையின் முகத்தில் காயம் இருந்தபோது இந்த கருக்கலைப்பு அளித்ததாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,நடிகையுடன் ஹோட்டலில் மணிகண்டன் தங்கியிருந்ததற்கான ஆதாரம் சிக்கியது.இதனால்,சம்மந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது.இதற்கிடையில்,அவரின் 2 செல்போன்கள் சைபர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.மேலும்,நடிகையின் செல்போனையும் போலீசார் சோதனை செய்தனர்.

இந்நிலையில்,நடிகைக்கு அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ்கள் மற்றும் வீடியோக்களை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடனுக்குடன் அழித்ததாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும்,மேற்கொண்டு விசாரணை நடத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.