இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்..! முதலில் எங்கு செல்கிறார் தெரியுமா..?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநில மைசூர் வருகிறார். அங்கிருந்து தனி

President Droupadi murmu

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநில மைசூர் வருகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் முதுமலை அடுத்த மசினகுடி ஹெலிபேடில்  உள்ளார்.

பின் அங்கிருந்து, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு காரில் செல்ல உள்ளார். அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்திக்க உள்ளார்.  அங்கிருந்து மாலை 5 மணி அளவில் புறப்பட்டு சென்னை செல்கிறார்.

சென்னை விமான நிலையம் நிலையத்தில் குடியரசுத் தலைவரை தமிழக ஆளுநர் மற்றும் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கின்றனர. பின் ஆளுநர் மாளிகையில் அவருக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6- ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 165-வது பட்டமளிப்பு விழாவிலும்  குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

பின் மாலை 7 மணிக்கு ஆளுநர் மாளிகை தர்பார் அரங்குக்கு ‘பாரதியார் அரங்கம்’ என்று பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்கிறார். அதன்பின் அவருக்கு ஆளுநர் மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படுவதாவும், இந்த விருந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.