கன்னியாகுமரி வந்தடைந்த குடியரசு தலைவர் படகில் பயணம்..!

கன்னியாகுமரி வந்தடைந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு படகில் பயணம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரி வந்தடைந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு படகில் பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, தற்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு 6 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் இன்று கன்னியாகுமரிக்கு வருகை புரிந்துள்ளார்.

கன்னியாகுமரி வந்தடைந்த குடியரசு தலைவர்

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

இதனையடுத்து,  திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவிடத்தை பார்வையிடுவதற்காக படகில் பயணம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் குடியரசு தலைவர் கலந்து கொள்ள உள்ள  நிலையில்,பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.