ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

unknown node

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில  நாட்களுக்கு முன்னதாக மார்க்சியம் குறித்து  ஆளுநர் பேசிய பேச்சை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய கே.பாலகிருஷ்ணன், நாங்கள் அனுப்பியுள்ள புத்தகத்தை படியுங்கள்; 2000 ஆண்டுகள் கொண்ட முதலாளித்துவ தத்துவம், 200 ஆண்டுகள் கொண்டது மார்க்சிய தத்துவம். நீங்கள் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர் ஆனால் மார்க்ஸ் வாழ்நாள் முழுவதும் சம்பளம் வாங்காமல் கஷ்டப்படும் மக்களுக்காக இருந்தார் என தெரிவித்துள்ளார்.