அரசியல் கட்சி பிரதிநிதிபோல் ஆளுநர் பேசி வருகிறார் – செல்லூர் ராஜு

Sellur Raju said that the political views spoken by the Tamil Nadu Governor cannot be accepted.

selloor raju

தமிழ்நாடு ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என செல்லூர் ராஜு பேட்டி.

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சி பிரதிநிதி போல் பேசி இருக்கிறார்.

ஆளுநர் அவராக பேசுகிறாரா இல்லை அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா என தெரியவில்லை. ஆளுங்கட்சியினர் ஆளுநர் பற்றி விமர்சிப்பதையும் ஏற்கமுடியாது. ஆளுநர் – ஆளுங்கட்சி மோதலால் மக்கள் திட்டங்கள் பாதிப்பு என தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், செல்லூர் ராஜு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி பிரதிநிதிபோல் ஆளுநர் பேசி வருகிறார் – செல்லூர் ராஜு