#Breaking:ரேசன் கடைகளுக்கான அதிரடி அறிவிப்பு – தமிழக அரசு...!

The Government of Tamil Nadu has issued an order to pay the second installment of the Corona Relief Fund in the ration shops by the 25th

ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை வருகின்ற 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த மாதத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து,கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பானது வழங்கப்பட்டு வருகிறது.எனினும்,சில பகுதிகளில் நிவாரணம் வழங்கும் பணிகள் தாமதமாகிறது

இந்நிலையில்,ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான ரூ.2,000-த்தையும் வருகின்ற ஜூன் 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறையானது,அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.