அரசியல் சாசனத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் படம் திமிலுள்ள காளை – சு.வெங்கடேசன் எம்.பி

சிந்துவும் வைகையும் இம்மண்ணின் ஆதிப்பண்பாட்டின் தொடர்ச்சி என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

சிந்துவும் வைகையும் இம்மண்ணின் ஆதிப்பண்பாட்டின் தொடர்ச்சி என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘அரசியல் சாசனத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் படம் திமிலுள்ள காளை. அது சிந்துவெளிநாகரிகத்தின் அடையாளம். அதே திமிலுள்ள காளை தான் கீழடி அருங்காட்சியத்திலும் துள்ளிகுதிக்கிறது.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட எலும்புத்துண்டுகளை பகுப்பாய்வு செய்து திமிலுள்ள காளையை அடையாளப்படுத்தியுள்ளனர். கீழடியில் கிடைத்துள்ள குறியீட்டு எழுத்துகள் எண்பது சதவிகிதம் சிந்துவெளி குறியீடுகளோடு பொருந்துகிறது. சிந்துவும் வைகையும் இம்மண்ணின் ஆதிப்பண்பாட்டின் தொடர்ச்சி.

இந்துத்துவா சனாதானிகள் உருவாக்கும் ஆரிய- வைதீக கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும் இருக்கிறது. எனவேதான் “கீழடி எங்கள் தாய்மடி” என்று உரக்கச்சொன்னோம். விடாது குரலெழுப்பினோம். அனைத்து தளத்திலும் அனைவருடனும் இணைந்து செயல்பட்டோம்.

இந்த அரசியல் செயல்பாட்டிற்காக நேற்று முன்தினம் நடந்த கீழடி அருங்காட்சியக திறப்புவிழாவில் தமிழக முதலமைச்சரால் சிறப்பு செய்யப்பட்டது மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

unknown node
அரசியல் சாசனத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் படம் திமிலுள்ள காளை – சு.வெங்கடேசன் எம்.பி