மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் – டிடிவி தினகரன்

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட்.

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட்.

புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெயரளவுக்கு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும். மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் என பதிவிட்டுள்ளார்.

unknown node
மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் – டிடிவி தினகரன்