#Breaking:தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

The curfew with restrictions in Tamil Nadu has been extended for another two weeks.

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நிறைவடைய உள்ளதையடுத்து, இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில்,தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு,அதாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

unknown node