அதிமுக பொதுக்குழுவுக்கு வந்திருந்த அக்கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது என திருமாவளவன் ட்வீட்.
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி, இன்று காலை முதலே வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அதிகாலை புறப்பட்டு சென்றேன். வானகரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதிமுக பொதுக்குழுவுக்கு வந்திருந்த அக்கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node