#Breaking:காவிரி நீர் மேலாண்மை கூட்டம் தொடங்கியது...!

The 12th Consultative Meeting of Cauvery Water Management is currently underway via video conference

காவிரி நீர் மேலாண்மையின் 12 வது ஆலோசனை கூட்டமானது ,காணொலி காட்சி வாயிலாக தற்போது தொடங்கியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு,காவிரி நீர் மேலாண்மையின் 12 வது ஆலோசனை கூட்டமானது ,காணொலி காட்சி வாயிலாக தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

மத்திய நீர் ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தமிழகம்,கர்நாடகா,புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக,தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதன்படி,தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக ஜூன்,ஜூலை மாதத்திற்கு கர்நாடக அரசு வழங்கவேண்டிய டிஎம்சி நீர் குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல்,காவிரியில் அணை கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி,கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது ஆணை கட்டக்கூடாது என தமிழக அரசு வலியுறுத்தவுள்ளது.

மேலும்,பிற மாநிலங்களும் கர்நாடக அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய காவிரி நீர் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Breaking:காவிரி நீர் மேலாண்மை கூட்டம் தொடங்கியது...!