ஆளுநராக பதவி ஏற்ற சிறுது நேரத்தில் 6 புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் தமிழிசை.
தமிழக பாஜக தலைவராக பணியாற்றி வந்த தமிழிசையை தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.இதன் பின் தனது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
unknown nodeபின்னர் நேற்று காலை தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழிசை செய்த முதல் பணி தெலுங்கானாவின் 6 புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததுதான் .தான் ஆளுநராக பதிவியேற்ற சிறிது நேரத்திலேயே அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.