முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வருக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஆளுநர் வாழ்த்து

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ’70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

unknown node