தமிழ்நாடு அரசு ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக கூறுகிறோம் என பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுகவின் மன்னார்குடிஎம் எல்ஏ டிஆர்பி ராஜா மற்றும் அதிமுகவின் அருண்மொழி தேவன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் கீழ் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
அந்த வகையில் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பேசுகையில், டெல்டாவில் நிலக்கரி சுரங்க ஏல விவகாரத்தில் முதலமைச்சர் வேகமாக செயல்பட்டு, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலக்கரி அமைச்சகத்திடம் வலியுறுத்திய அதிகாரிகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக கூறுகிறோம். முதலமைச்சர் எவ்வளவு வேகமாக செயல்பட்டு உடனடியாக பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது தெரியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், வானதி செனிவாசன் அவர்கள் தனியாருக்கு தாரை வார்த்தது குறித்து பேசியது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், தனியாருக்கு தாரைவார்ப்பது குறித்து பாஜக பேசுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.