#Breaking:மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன்,முதல்வருடன் சந்திப்பு...!

Tamil Nadu Development Policy Committee Deputy Chairman Jayaranjan meets the Chief Minister

மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன்,முதல்வருடன் சந்திப்பு.

மாநில வளர்ச்சிக்கான கொள்கைகள் வகுக்கப்படும்.

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில்,மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசனும்,துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,மருத்துவர் சிவராமன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யபப்ட்டுள்ளனர்.

இந்நிலையில்,மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

பின்னர்,இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயரஞ்சன்,

“நீண்ட கால வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும்,அதில் மக்கள் சார்ந்த வளர்ச்சி இருக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதன்படி,மாநில வளர்ச்சிக்கான கொள்கைகள் வகுக்கப்படும்”,என்று ஜெயரஞ்சன் தெரிவித்தார்.