மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது -கமல்ஹாசன்

Surgical strike by the Central government on people-kamal haasan

அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அண்மை காலமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ஒரு புறம் பெட்ரோல் ,டீசல் விலை தொடர்ந்து வந்தாலும் மறுபுறம்  கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்து உள்ளது.சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக அதிகரித்துள்ளது.நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது .ஏற்கனவே கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி ரூபாய் 25 உயர்த்தப்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

unknown node
மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது -கமல்ஹாசன்