உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு
unknown nodeஅதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாக உள்ள நிலையில், கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
unknown nodeஅந்த கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தனர். பொதுகுழுவை எதிர்த்தும் , அங்கு அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்ககோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், அதிமுக பொதுகுழுக்கூட்டம் செல்லும் என அறிவித்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தீர்ப்பு நாள் – அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு
இந்த நிலையில், இந்த வழக்கில் இருதரப்பு வாட்ச்ங்களும் கேட்கப்பட்ட நிலையில், இன்று இது தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.