ஆளுநருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள் – ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு..!

ஆளுநருக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஆளுநருக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர்  உரை குறித்தும், ஆளுநரின் செயல்பாடு குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து, முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

ஆளுநருக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக அரசியல் கட்சியினர் அறிவித்துள்ளதையடுத்து, 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.