விரைவில் இவர்களின் வேடம் களையப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

The chief minister said that some people are betraying Tamils and Tamils and pretending to be good people.

mk stalin

சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் துரோகங்களை செய்து கொண்டு, நல்லவர் வேடம் போட்டு நடித்து கொண்டு இருக்கிறார்கள் என முதல்வர் பேச்சு.

சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை அறக்கட்டளையின் 42ம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கலந்து அக்கொண்டார். இசை விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

இயல் செல்வம் விருது எஸ். ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும், ராஜ ரத்னா விருது கணேசனுக்கும், நாட்டிய செல்வம் விருது எஸ்.பழனியப்பனுக்கும், வீணை செல்வம் விருது ராஜேஷ் வைத்யாவுக்கும், தவில் செல்வம் விருது கண்ணனுக்கும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், தமிழ் முகமூடியை போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் துரோகங்களை செய்து கொண்டு, நல்லவர் வேடம் போட்டு நடித்து கொண்டு இருக்கிறார்கள். விரைவில் அவர்களின் வேடம் களையப்படும், மக்கள் அவர்களுக்கான சரியான பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.