செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது – கண்ணதாசன்

State Human Rights Commission member Kannadasan said Senthil Balaji looked tired.

humanrights

செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார் என மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்ததா? என்பது குறித்து ஆணைய உறுப்பினர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி இருப்பதால் அவரால் அதிகம் பேச இயலவில்லை என்று கூறினார். அமலாக்கத்துறை கடுமையாக நடந்து கொண்டதாகவும், கைது செய்த போது இழுத்து சென்றதால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும், தன்னை தாக்கி அதிகாரிகளின் பெயரையும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தான் விசாரணை நடத்த வந்தேன். அமைச்சர் மட்டுமல்ல மற்ற நிகழ்வுகளிலும் நேரில் சென்று நாங்கள் விசாரணை நடத்தி உள்ளோம். மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார்.