இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் நச்சுவிதைகளை விதைப்பதை அனுமதிக்கக்கூடாது – பீட்டர் அல்போன்ஸ்

இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் நச்சுவிதைகளை விதைப்பதை அனுமதிக்கக்கூடாது பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.

இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் நச்சுவிதைகளை விதைப்பதை அனுமதிக்கக்கூடாது பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.

இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும் என்று ஆளுநர்ஆர்.என்.ரவிதெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து சிறுபான்மை நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரயில் தண்டவாளங்களைப் போன்று ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒன்றாகப் பயணித்தால்தான் இந்திய அரசியல் சாசனச் சட்டம் செயல்படும். இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் நச்சுவிதைகளை விதைப்பதை அனுமதிக்கக்கூடாது. ராஜ்பவனில் நடக்கும் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் யார் செலவில் நடக்கின்றன?

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,தேச ஒற்றுமைக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரான இதைப்போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளை உடனடியாக குடியரசு தலைவர், பிரதமர்,உள்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.