ஏற்கனவே சீமான் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சீமான் பரப்புரை செய்ய அனுமதி
தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சீமான் பரப்புரை செய்ய அனுமதி கிடையாது. மூன்று நாட்களுக்கு சீமான் பரப்புரை செய்ய திட்டமிட்ட இடங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
மற்ற கட்சியினர் பரப்பரை செய்யும் இடங்களில் சீமான் அனுமதி கேட்டால் அனுமதி வழங்க இயலாது. பதற்றம் நிலவுவதால் சீமான் பரப்புரைக்கு பாதுகாப்பு தர முடியாது என எஸ்பி அறிக்கை அளித்திருந்ததாக தெரிவித்திருந்தார்.
சீமான் பரப்புரைக்கு அனுமதி
இந்த நிலையில், ஏற்கனவே சீமான் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சீமான் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக எஸ்.பி சசிமோகன் தகவல் அளித்துள்ளார்.